காரில் வந்த தொழிலதிபரை தாக்கி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த கார் டிரைவரையும் அவரது தந்தையையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தொழிலதிபராக உள்ளார். இவர் பொள்ளாச்சிக்கு நிலம் வாங்குவதற்காக சென்னையிலிருந்து காரில் வந்துள்ளார். அந்த காரை ஆனைமலை மாசாணி அம்மன் கார்டன் பகுதியை சேர்ந்த பரத் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கரன் தனது காரில் 33 லட்சம் பணம் மற்றும் 24 பவுன் நகை ஆகியவற்றை வைத்திருந்தார். கடந்த 28ஆம் தேதி காலை 10.45 மணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மூலனூர் பகுதிக்கு கார் வந்து சேர்ந்தது.
அந்த சமயத்தில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் காரை வழிமறித்து நிறுத்தினார். அதன் பின் அந்த மர்ம நபர் பாஸ்கரனை இரும்பு கம்பியால் தாக்கி ரூபாய் 33 லட்சம் பணம் மற்றும் 24 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து விட்டு சென்றுள்ளார். இதனை தடுப்பதற்கு அங்கு யாரும் முன் வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மூலனூர் காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சென்னையில் இருந்து பொள்ளாச்சிக்கு நிலம் வாங்குவதற்காக வந்த பாஸ்கரனிடம் ரூபாய் 33 லட்சம் பணமும் 24 பவுன் தங்க நகையும் இருப்பதை பரத் தெரிந்து கொண்டு அதனை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியுள்ளார்.
அதேபோல் தனது தந்தையான குமாரையும் செல்போனில் தொடர்பு கொண்டு வேலையை கச்சிதமாக முடிக்குமாறு கூறியுள்ளார். அதன்படி பரத் ஓட்டி வந்த காரை மூலனூர் பகுதியில் அவரது தந்தையே வழிமுறை மரித்து பாஸ்கரனை தாக்கி நகை மற்றும் பணத்தை பறித்து சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனை எடுத்து போலீசார் பரத்தையும் அவரது தந்தையான குமாரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த பணம், நகை மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். மேலும் போலீசார் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.