Categories
மாநில செய்திகள்

தந்தை, மகன் உயிரிழப்பு விவகாரம்… “நாளை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்படுகிறது”.!!.!!

தமிழகம் முழுவதும் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருத்துக்கடைகள் அடைக்கப்படும் என மருந்து வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் சிறையில் உயிரிழந்த விவகாரத்தை எதிர்த்து கடையடைப்பு செய்வதாக தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க செயலாளர் செல்வன் சேலத்தில் அறிவித்துள்ளார். முன்னதாக, சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை ஒருநாள் கடையடைப்பு செய்யப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மருந்துக்கடைகளும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.2 கோடி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல மருந்து வணிகர்களிடம் போலீசாரின் கெடுபிடியை தவிர்க்கவும் வலியுறுத்தி இந்த கடையடைப்பு நடத்தப்படும் என தெரிப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |