Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சற்றும் எதிர்பாராத தருணத்தில்… தந்தை-மகனுக்கு நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடான் குண்டு பகுதியில் பெரியசாமி என்ற  கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பிரவீன்குமார், கிருபா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் பெரியசாமி அப்பகுதியில் இருக்கும் ஒரு விவசாய கிணற்றில் தனது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் முருகேசன் ஆகியோருக்கு நீச்சல் பழகி கொடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் கிருபா தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெரியசாமி தனது மகனை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் தந்தை, மகன் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பிரவீன்குமார் மற்றும் முருகேசன் ஆகிய இருவரும் சத்தம் போட்டுள்ளனர். இவர்களின் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் இருவரின் உடலையும் கைப்பற்றி காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |