Categories
உலக செய்திகள்

கடற்கரையில் விளையாடிய போது நேர்ந்த பரிதாபம்… அலையில் அடித்து செல்லப்பட்டு… தந்தை, மகன் உயிரிழப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபரும் அவரின் ஆறு வயது மகனும் ஓமன் நாட்டின் கடற்கரையில் கடலில் மூழ்கி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் குடும்பத்தினரோடு, ஓமன் கடற்கரைக்கு விளையாட சென்றிருக்கிறார். கடற்கரையோரம் மகிழ்ச்சியாக விளையாடிய போது திடீரென்று பயங்கர அலை வந்து அவர்கள் மீது மோதியது.

இதில் அந்த நபர் உள்பட அவரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இழுத்துச் செல்லப்பட்டார்கள். இதில், அவரும் அவரின் 6 வயது மகனும் பரிதாபமாக பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் மகள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடற்கரையில் நின்றவர்கள் எடுத்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |