மகளுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொட்டில்பாடு என்ற பகுதியில் சிலுவை இருதயம் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில நாட்கள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் மனமுடைந்த சிலுவை இருதயம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இவருக்கு 2 மகள்களும் 3 மகன்களும் உள்ளனர்.
இவருடைய இரண்டாவது மகளுக்கு வருகின்ற 21 ஆம் தேதி திருமண ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் அவரது தந்தை இவ்வாறு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.