இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்தில் தந்தை – மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.லட்சுமியாபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பட்டாசு தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு வெங்கடேசுவரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு முனிப்பாண்டி என்ற மகன் மற்றும் முத்துலட்சுமி என்ற மகள் இருந்துள்ளார். இதனை அடுத்து முருகன் தனது குடும்பத்துடன் சிவகாசி ரோட்டில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் முருகனின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் முருகன் மற்றும் முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் வெங்கடேஸ்வரி முனி பாண்டி உள்ளிட்ட அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகன் மற்றும் முத்துலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.