பிரபல பாடகர் எஸ்.பி.பி விரைவில் குணமடைவார் என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் 15 நாட்களாக மருத்துவமனையில் இருந்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது அவரது மகன் எஸ்பிபி சரண் மக்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இது குறித்த வதந்திகள் பரவிவந்ததாகவும் யாரும் அதை நம்ப வேண்டாம் என்றும் தந்தை உடல்நலம் குறித்து நானே உங்களுக்காக தெரிவிக்கிறேன் என்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ட்விட்டரில் எஸ்.பி.பி சரண் பதிவிட்டிருந்தார்.
அந்த வகையில், இரு தினங்களுக்கு முன்னதாக எஸ்பிபி உடல்நிலை சீராக வருவதாகவும் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார். தற்பொழுது அவரது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் திங்கட்கிழமை அன்று பூரண குணமடைவார் என்றும் பிரார்த்தனை செய்த நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ளார்.