Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தந்தை-மகன் செய்த செயல்… கட்சி செயலாளர் உட்பட 4 பேர் கைது… நாமக்கல்லில் பரபரப்பு…!!

இட பிரச்சனை தீர வேண்டும் என தந்தை-மகன் காவல்நிலையத்திற்கு சென்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள ஓடப்பளையம் கிராமத்தில் வேலுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இளையராஜா மற்றும் சத்யராஜ் என 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலுசாமி தனக்கு சொந்தமான இடத்தை இளையராஜாவுக்கும், சத்யராஜ்க்கும் பிரித்து கொடுத்துள்ளார். இதனையடுத்து சத்யராஜ் அவருக்கு வழங்கிய நிலத்தை மற்றொரு நபருக்கு விற்பனை செய்துவிட்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். தற்போது வேலுசாமி, இளையராஜா ஆகியோர் சத்யராஜ் விற்பனை செய்த நிலத்திற்கு செல்லும் தண்ணீர் குழாய்களை உடைத்துள்ளனர்.

இதனால் இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மோகனூர் காவல்நிலையத்திற்கு சென்ற வேலுசாமி, இளையராஜா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் தமிழ் புலிகள் கட்சியன் ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இவர்களிடம் காவல்நிலையத்திற்கு சென்று தீக்குளிப்பது போல் நடித்தால் இட பிரச்சனை தீர்ந்துவிடும் என கூறியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் வேலுசாமி மற்றும் அவரது மகன் இளையராஜாவை கைது செய்து தற்கொலைக்கு துண்டிய செல்வராஜ் மற்றும் சுபாஷ் சங்கர் ஆகியோரையும் கைது செய்துள்ளனர். மேலும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாமக்கல் கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |