Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

12 மணிக்குள்ள சொல்லுங்க…. சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்…. அரசுக்கு கெடு விதித்தது ….!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணத்தில் காவல்துறை மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என ஐ.கோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை  இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. உயிரிழந்த இருவரின் உடல் நிலை பிரதே பரிசோதனை அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையும் மின்னஞ்சல் வழியாக சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் இருவரது உடலிலும் காயங்கள் இருந்ததாகவும், அதன் அடிப்படையில் போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய போதிய முகாந்திரம் உள்ளது என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த வழக்கை சிபிஐ அனுமதி பெற்று, அதற்கான அலுவலகங்களை அமைத்த அதன் பின்னரே விசாரணை தொடங்கும்,  அவர்கள் விசாரணை தொடங்குவதற்கு முன்பு தடயங்கள் அளிக்கப்படும்வாய்ப்பு உள்ளது. இந்த விசாரணையை பொருத்தவரை  நீதி தாமதிக்கக்கூடாது.

ஒவ்வொரு நொடியும் முக்கியமானது அதனை கருத்தில் கொண்டு இந்த வழக்கில் சிபிஐ விசாரணையை துவங்கும் வரை நெல்லை சரக டிஐஜி இந்த வழக்கு விசாரணையை ஏற்க இயலுமா ? அல்லது  நெல்லை சிபிசிஐடி உடனடியாக வழக்கை விசாரணை செய்ய இயலுமா ? என்று தகவல் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். இன்று 12 மணிக்குள் இது தொடர்பான அறிக்கையை உயர் நீதிமன்றம் கிளையில் சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

Categories

Tech |