Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நான் எப்படி போறது” மகன்-மருமகளுக்கு விழுந்த வெட்டு… சென்னையில் பரபரப்பு…!!

குடும்ப தகராறில் தந்தை மகன் மற்றும் மருமகளை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள பல்லாவரம் பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சைக்கிள் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த சுப்பிரமணியனுக்கு ஐந்து மகன்கள் மற்றும் நான்கு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் திருமணமான தனது அனைத்து பிள்ளைகளுக்கும் சுப்ரமணியன் சொத்துக்களை சரிபாதியாக பிரித்து கொடுத்து விட்டு தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து இவரது ஆறாவது மகனான முருகன் என்பவர் சலூன் கடை நடத்தி வந்துள்ளார். இவர் சுப்பிரமணியனின் வீட்டிற்கு பின்புறம் உள்ள கிணற்றுக்கு செல்லும் வழியை அடைத்து விட்டார்.

இதனால் தந்தைக்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபமடைந்த சுப்ரமணியன் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுப்பதற்காக குறுக்கே வந்த முருகனின் மனைவியான மாரிச்செல்வி என்பவருக்கும் அரிவாளால் வெட்டு விழுந்து விட்டது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த சங்கர் நகர் காவல் துறையினர் வழக்கு பதிந்து சுப்பிரமணியனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |