Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மகளை சீரழித்த தந்தை, பாதுகாப்பு என எண்ணி தாத்தா வீட்டில் தஞ்சம்..! இறுதியில் நிகழ்ந்த கொடூரம்!

அப்பா, தாத்தா இருவரும் சேர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கிய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்தவன் இளங்கோவன்.. இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில்  5 வருடங்களுக்கு முன் இவரது மனைவி இறந்துவிட்டார்.  இதில் இரண்டாவது  மகள், சித்தி வீட்டில் உள்ளார். 15 வயதாகும் மூத்த மகள், தந்தை இளங்கோவனுடன் வளர்ந்துள்ளார். தான் பெற்ற  மகள் என்றும் பார்க்காமல், காமவெறி மிருகமான இளங்கோவன், சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், தந்தை உடன் சிறுமி இருப்பது  பாதுகாப்பு இல்லை.. என்பதால் சிறுமியை அழைத்து கொண்டு, சிறுமியின் தாத்தா மாரிமுத்துவின் வீட்டில் கொண்டு போய் பத்திரமாக சேர்த்தனர்.

இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி வந்துள்ளது. இதனால் மருத்துவமனைக்கு அழைத்து  சென்று பரிசோதனை செய்ததில், சிறுமி 5 மாதம் கர்ப்பம் என்று தெரியவந்தது.

இதை கேட்டு ஆவேசமடைந்த மக்கள், சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து காவல்துறைக்கு புகார் கொடுத்தனர். காவல்துறையினர் சிறுமியிடம் மேற்கொண்ட விசாணையில் அதிர்ச்சியூட்டும் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அதாவது,  தாத்தா மாரிமுத்துவும், அப்பா இளங்கோவன் இருவரும் செய்த கொடுமைதான் தன் கர்ப்பத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார் அந்த சிறுமி . இதையடுத்து, அந்த காமகயவர்கள் இளங்கோவன் மற்றும் தாத்தா மாரிமுத்துவையும்  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |