மாப்பிள்ளையை பிடிக்காத காரணத்தினால் பெண்ணின் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இதனை அடுத்து மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து விட்டது. அதன் பின்னர் 2 – வது மகளுக்கு கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் பெண்ணின் தந்தையான பாலகிருஷ்ணனுக்கு மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலகிருஷ்ணன் வீட்டில் இருந்த மூட்டைப்பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.