ஐஐடி_யில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பாத்திமாவின் தந்தை இன்று தமிழக முதல்வரை சந்திக்க இருக்கின்றார்.
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட வழக்கு விசாரணையை மத்திய குற்றவியல் பிரிவு போலீசார் கையில் எடுத்துள்ளனர்.இதற்கிடையே மாணவியின் பெற்றோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து கோரிக்கை மனு அளிக்க இருக்கிறார். இன்று மதியம் விமானம் மூலமாக அவருடைய பெற்றோர் சென்னை வருகிறார்கள்.அதன் பிறகு நேரடியாக தலைமைச் செயலகம் சென்று முதல்வரை சந்திக்க அனுமதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மதியம் முதல்வரை சந்தித்த போது தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பது எனவே அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தொடர்பான ஒரு மனுவை முதல்வரிடம் அளிக்க இருப்பதாக மாணவியின் தந்தை தெரிவித்திருக்கிறார். அதன் தொடர்ச்சியாக காவல்துறை டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்திப்பதற்கான திட்டமும் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள் .