வெண்டைக்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு என்னென்ன பயன்களைத் தருகிறது என்பதை இதில் பார்ப்போம்.
வெண்டையின் காய், இலை, விதை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவக் குணங்கள் நிரம்பியவை. இதில் உள்ள நார்ப்பொருள்களால் கொலாஸ்டிரல் கரைந்து, மலச்சிக்கல் நோய் நீங்கும் இதனால் குடல் சுத்தமாவதோடு வாய்நாற்றம் அகலும்.
வீட்டில் மலச்சிக்கல், காய்ச்சல் போன்றவற்றால் யாராவது அவதிகப்பட்டால், பிஞ்சு காய்களை மோர்க் குழம்பாகத் தயாரித்து, உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இளம் வெண்டைப் பிஞ்சுடன், சர்க்கரை சேர்த்து, சாறுபோல் தயாரித்து அருந்தினால் இருமல், நீர்க்கடுப்பு, எரிச்சல் முதலியவை தணியும்.
உடலுக்கு குளிர்ச்சியளிக்கும். கரு உருவாவதற்கு தேவையான போலிக் அமிலம் இதில் நிறைந்துள்ளது . இதனால் கரு வளர்ச்சிக்கு இது துணை புரியும் .
மலச்சிக்கல் பிரச்சனைக்கு இது நல்ல தீர்வு அளிக்க கூடியது . அல்சரால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது ஒரு அறுமருந்து .
சீறுநீரக கோளாறுகள் சரியாகும் . வயிற்றின் தேங்கியுள்ள கழிவுகள் வெளியேறும் . இருமலை குணமாக்கும் .
இதய நோய் வராமல் பாதுகாக்கும் . புற்று நோய் செல் வளர்ச்சியை தடுக்க கூடியது .
இதில் ஆன்டி ஆக்ஸிடென்ட் , வைட்டமின் சி உள்ளது . இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் .
எலும்புகளின் வளர்ச்சியை அதிகரிக்கும் .இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது .
மூளை நரம்புகளை தூண்டி நியாபக சக்தி அதிகரிக்கும் . வயிற்று புண் சரியாகும் . உடலிற்கு புதுப் பொலிவை தரும் .