டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின் இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் டிக்டாக் தடையை தொடர்ந்து அதன் சந்தையைக் கைப்பற்ற இந்தியாவிற்கென பிரத்யேகமாக குறுவீடியோ சேவை ஒன்றை அறிமுகம் செய்ய சோதனை முயற்சி செய்து வருகிறது. இதற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், விரைவில் பேஸ்புக் தரப்பிலிருந்து இந்த புதிய வசதி குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.