Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கணவர் மரணம்… FB மோகம்…. வாலிபரை நம்பி இளம்பெண் தற்கொலை…. அனாதையான 13 வயது மகன்…!!

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை அடுத்த கேஎல்எஸ் நகரில் வசித்து வந்தவர் புவனேஸ்வரி. இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகன் உள்ளார். இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து  விட்ட நிலையில், தனது மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதையடுத்து அதே கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் என்ற வாலிபருடன் முகநூல் மூலம் புவனேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த அவர் புதிய துணை கிடைத்து விட்டதாக எண்ணி அவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.

இதையடுத்து காஜாமொய்தீன் திடீரென அவருடன் பேசுவதை நிறுத்தி விட, மனமுடைந்த புவனேஸ்வரி சம்பவ தினத்தன்று தான் இறந்துவிட போவதாக மொய்தீனுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முகநூல் மூலம் வந்த தகாத உறவால் இறுதியில் 13 வயது சிறுவன் அனாதையாக தவிப்பது தான் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Categories

Tech |