Categories
லைப் ஸ்டைல்

அதிகரிக்கும் தற்கொலை….. இதிலிருந்து தப்பிப்பது எப்படி….? சிறந்த வழிகள் இதோ….!!

ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் இளைஞர்களுக்கு ஒரு வித போதை ஆகவே மாறிவிட்டன. சமூக ஊடங்களில் அளவுக்கு அதிகமான நேரத்தையும், கவனத்தையும் செலவிடும் போது மனநலத்தை மட்டுமல்லாமல்  உடல் நலத்தையும் அதிகம் பாதிக்கிறது. சமீபத்தில் சமூக வலைதளங்களால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆகவே சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதிலிருந்து தடுக்கும் எளிய வழிகளை உங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். 

பயன்பாட்டை குறையுங்கள் : சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் குறைந்தபட்சம் மொபைல் போனில் செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நீங்கள் போனில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதை அறிய போனில் உள்ள பில்ட் இன் ஆப்ஷனை பயன்படுத்தவும். இதன்படி நீங்கள் செலவிடும் நேரத்தை அறிந்து அதனை குறைத்து கொள்ளுங்கள். 

 விடுமுறை விடுங்கள் : சமூக வலைதளங்களுக்கு விடுமுறை அளியுங்கள். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் உங்கள் சமூக வலைதளங்களில் சென்று பார்க்கும் ஆவலை கட்டுப்படுத்திக்கொண்டு, விடுமுறை அளியுங்கள்.

நோட்டிபிகேஷன்கள் வேண்டாம் : 

மொபைல் போனில் இருந்து வரும் எந்த சத்தமும், அது வைப்ரேஷனாக  இருந்தாலும் கூட, நம் கவனத்தை ஈர்க்கவே செய்கிறது. உங்கள் போனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை ஆப் செய்து வைப்பதன் மூலம் கவனம் சிதறுவதையும்,  நேரம் வீணாவதையும் தடுக்கலாம். 

தொலைவில் வைக்கவும் : நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிருங்கள். உதாரணத்துக்கு காலையில் எழுந்த உடன் முதல் ஒரு மணி நேரம் அல்லது சாப்பிடும் நேரத்தில் போனை முற்றிலும் தவிர்க்கலாம் அல்லது குளியலறை போன்ற சில அறைகளில் மட்டும் மொபைல்போன் பயன்படுத்துவதற்கு நீங்களே தடை விதித்துக் கொள்ளலாம். 

நிஜ உலகில் வாழுங்கள் :சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்காமல் நண்பர்களை நேரில் சந்தித்து பேசுவது, நடைப்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது உற்சாகமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். அதே போல, முன் பின் தெரியாதவர்களுடன் சமூக வலைதளங்களில் பேசி பல பிரச்சனைகளில் சிக்குவதற்கு பதிலாக, உலகில் நிஜ மனிதர்களை சந்தித்து பாதுகாப்பாக,  சந்தோஷமாக  வாழ்க்கையை வாழ்வதே மேல். 

சமூக வலைதளங்களால் ஏற்படும் பாதிப்புகள் :சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவது இளைஞர்களுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனால் மனச்சோர்வு, கவலை, தனிமையுணர்வு, தன்னை காயப்படுத்திக் கொள்வது, தற்கொலை உணர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனுடைய பாதிப்புகளை உணர்ந்து சமூக வலைதள பயன்பாடுகளை இளைஞர்கள் குறைத்துக் கொண்டு எதிர்கால லட்சியத்தை நோக்கி பயணிப்பது சிறந்த பலன்களை அளிக்கும். 

Categories

Tech |