Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் அச்சம்!! புதிதாக மிரட்டும் “ஷிகெல்லா வைரஸ்”…. பீதியில் மக்கள்…!!

கொரோனாவை அடுத்து புதிதாக ஒரு வைரஸ் பரவி கேரளா மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் புதிய வைரஸ் தொற்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஷிகெல்லா எனப்படும் இந்த வைரஸ் தொற்று உள்ள நபருக்கு வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகள் முதலில் இருந்துள்ளது. ஆனால் சிலருக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நோய் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கேரளாவில் பரவிய இந்த வைரஸ் தற்போது கோட்டபரம்பு வார்டு வரை பரவியுள்ளது. இந்த புது வைரசால் தற்போது வரை 20 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இந்த 20 நபர்களில் 4 பேர் பெரியவர்கள், மற்ற அனைவரும் குழந்தைகள் ஆவர். இந்த நோயால் கடந்த வரம் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |