கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்கொரிய நாடாளுமன்ற கட்டிடம் முழுவதும் ஊழியர்களால் மருந்து தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டது.
சீனாவின் வூஹான் நகரில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கி உலகத்தையே பயமுறுத்தி வருகின்றது. இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 2698 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வைரஸ் 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கின்றது.
அதன் ஒருபகுதியாக சீனாவிலிருந்து அதன் அண்டை நாடான தென்கொரியாவிலும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அந்தநாட்டிலும் சில மக்கள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனா வைரஸ் கல்வி அதிகாரி ஒருவருக்கு பரவியுள்ளது. இதையறியாமல் 3 எம்.பிக்கள் அந்த கல்வி அதிகாரியை சந்தித்து பேசியது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற இருந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும் நாடாளுமன்ற கட்டிடம் உடனடியாக மூடப்பட்டு, அவசர அவசரமாக பாதுகாப்பு உடையணிந்த ஊழியர்களை கொண்டு நாடாளுமன்றம் முழுவதும் மருந்து தெளித்து சுத்தபடுத்தப்பட்டது.