உலக அளவில் சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் பிஎப் 7 உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று தற்போது இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் மத்திய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக அதிக அளவில் வாய்ப்பு இருக்கிறது. இதனால் முக்கியத்துறைகளான சுற்றுலா, மருத்துவம், போக்குவரத்து மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய தொழில்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலானால் இ-காமர்ஸ், இ-டெக் ஆன்லைன் கேமிங், லாஜிஸ்டிக்ஸ், பின்டெக் போன்ற துறைகளில் பணிபுரிய ஊழியர்கள் மீண்டும் வீட்டிலிருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் மேற்கண்ட துறைகளில் அதிக அளவு ஊழியர்கள் தேவைப்படும் நிலையில் பொருளாதார மந்த நிலை காரணமாக புதிய ஊழியர்களை அந்நிறுவனங்கள் நியமிக்காமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.