தோல்வி பயத்தில் தான் நாங்கள் தேர்தல் கமிஷனரை சந்திக்க வந்தோம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றியை தடுக்க அதிமுக முறைகேடுகளை செய்து வருகின்றது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் தேர்தலுக்கு முன்பு முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்கள் திமுக தோல்வி பயத்தில் தேர்தலை நிறுத்த பார்க்கிறது என்று சொன்னார்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின் ,
இப்பயும் சொல்வாங்க , தோல்வி பயத்தில் தான் திமுகவின் தேர்தல் கமிஷனை நாடி இருக்கின்றது என்று சொல்லுவார்கள். எண்களின் வெற்றியை அதிமுக தடுக்க பார்க்கின்றது. அந்த பயத்தில் தான் நாங்க தேர்தல் கமிஷனரை நாடினோம்.
உள்ளாட்சி தேர்தலில் இந்த மாதிரியான அயோக்கியத்தனம் செய்வாங்க என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் நீதிமன்றம் சென்றோம். அவங்கள பத்தி எனக்கு தெரியும் , அதனால தான் முன்கூட்டியே அதிமுகவின் முறைகேட்டை தடுக்க ஈடுபட்டேன். அவன் திருட போறான் என்று தெரியும். திருடன் திருடுவதை தடுப்பதற்கு தான் முன்னாடியே நீதிமன்றம் சென்று திருட்டை தடுக்க முயற்சித்தோம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.