சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் திடீரென கோளாறு ஆனதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினர்.
பிரான்ஸிலிருந்து விமானம் ஒன்று நேற்று மதியம் சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஆனதால் விமானத்தை உடனடியாக தரை இறக்க வேண்டும் என்று விமானி தெரிவித்தார். அதன்படி ஜெனீவா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டது. விமானி எந்த சேதமும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார். அதன்பின் விமானத்தில் பயணித்த 39 பயணிகளும் பத்திரமாக இறங்கினர். இச்சம்பவத்தால் ஜெனீவா விமானநிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியுள்ளது.