ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவவர்கள் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் மத்திய, மாநில அரசுகளின் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி-7 கடைசி நாளாகும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று பிப்ரவரி 13-ல் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாணவர்கள் விண்ணப்பங்களை எவ்வித தவறுகளுமின்றி பதிவேற்றம் செய்யுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.