தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக 2020-2021 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கி வருவதால் மாணவர்கள் பள்ளிக்கு வரும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. மேலும் இன்டர்மீடியட் கல்லூரிகள், டிகிரி கல்லூரிகளுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.