Categories
தேசிய செய்திகள்

“21 ஆம் தேதி” பள்ளிகள் திறப்பு… ஆனா இதெல்லாம் செய்யணும்… மத்திய அரசின் அதிரடி தகவல்…!!

வருகின்ற 21அம் தேதி பள்ளிகளை திறக்க மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து இருப்பதால் வருகின்ற 21 ஒன்றாம் தேதி பள்ளிகளை திறக்கலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வழிகாட்டு நெறிமுறைகளாவன,

  • ஆய்வகங்களில் நாற்காலிகள் மற்றும் மேசைகள் 6 அடி இடைவெளியுடன் அமைக்கப்பட வேண்டும்.
  • வகுப்பறைகளில் மாணவர்களுக்கு இடையே தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
  • கிருமிநாசினி அடிக்கடி பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
  • மேலும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
  • மடிக்கணினி, நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வெளியே செல்ல தன்னார்வ அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்.
  • அவ்வாறு செல்ல வேண்டுமென்றல், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
  • மாணவர்கள் அடிக்கடி பயன்படுத்தும் கதவுகள், நாற்காலிகள், பெஞ்சுகள், கழிப்பறை மற்றும் மாடிப்படிகளின் கைப்பிடிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யவேண்டும். இவை அனைத்தும் வழிகாட்டு நெறிமுறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |