Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக… வாட்ஸ்-அப் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு..!!

வாட்ஸ்அப் நிறுவனம் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பின் புதிய விதிகளுக்கு எதிராக மத்திய அரசு புதிய சமூக ஊடக விதிகளை அறிவித்திருந்தது. இதற்கு எதிராக வாட்ஸ்அப் நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இதில் வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளதாவது: “வாட்ஸ் அப்பில் பகிரப்படும் ஏதேனும் ஒரு செய்தி அல்லது தகவலை முதலில் பதிவிட்டவரை கண்டறிய வழிமுறைகளை உருவாக்க கூறப்பட்டுள்ளது. இது ஒரு நிறுவனத்தின் தனிநபர் தரவு பாதுகாப்புக்கு எதிரானது. மேலும் மத்திய அரசின் புதிய வழிமுறை இதற்கு அனுமதி வழங்கினால், தனிநபர் அந்தரங்க விவரங்கள் தரவு விசாரணை அமைப்புகளின் தேவைக்காக தனியார் நிறுவனங்கள் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

மேலும் ஒருவர் உருவாக்காத செய்தியை பார்க்கும் போது அவர் மீது நடவடிக்கை எடுக்க வழிவகை ஏற்படும். இது தவறு செய்யாதவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது கருத்துரிமை, பேச்சுரிமை உள்ளிட்டவற்றுக்கு எதிரானது. இது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு புறம்பானது என அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறி முறையை அமல்படுத்த மே 25-ம் தேதி கடைசி என்ற நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்களின் ஊழியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதை தடுக்க வேண்டும்.

Categories

Tech |