தமிழகத்தில் 22 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்திருந்த நிலையில் 21 ஆவது நாளான நேற்று மக்களிடையே பேசும்போது மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டித்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 20ஆம் தேதிக்கு மேல் சில தளர்வுகளை மத்திய அரசாங்கம் பிறப்பித்துள்ளது.
மேலும் அதிகம் பாதித்த மாவட்டங்களில் தீவிரமாக கண்காணித்து கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் நாடு முழுவதும் 170 மாவட்டங்களை கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் 22 மாவட்டமாக ஹாட் ஸ்பாட் மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, வேலூர், ஈரோடு, திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு மண்டலமாக அறிவித்துள்ளது. ஒரே மாவட்டத்தில் 15 க்கும் அதிகமானோர் இருந்தால் அது ஹாட்ஸ்பாட்டாக வரையறுக்கப்பட்டுள்ளது.