Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் மருத்துவம் லைப் ஸ்டைல்

பசி இல்லனு ஃபீல் பண்றீங்களா? கவலைய விடுங்க!! இத ட்ரை பண்ணுங்க…

சிலருக்கு எவ்வளவு நேரம் ஆனாலும் பசிக்கவே செய்யாது. அப்படி இருக்கும் பட்சத்தில் உணவு உண்ண தோணாது. பின்பு தேவையற்ற நோய்கள் வந்து சேரும். இதனை தடுப்பதற்கும்  பசியைத் தூண்டுவதற்கும் இயற்கை மருத்துவத்தை பற்றி  இந்த தொகுப்பில் பார்ப்போம் !!…

மரிக்கொழுந்து உட்கொண்டால் மிகுந்த பசியையும் பலத்தையும் கொடுக்கும்.

உணவு முடிந்த பிறகு அரைத்த சந்தனத்தை மார்பு, கைகளில் தடவிக் கொள்வது உணவு சீரணிக்க உதவும்.

மிளகுத்தூள் பசியை தூண்டும் , இஞ்சி வடகமும்  பசியை தூண்டும்.

வயிற்றுப் பூச்சித் தொல்லை நாக்குப் பூச்சித் தொல்லை ஒழிய சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

பாக்கை பொடிசெய்து பாலில் கலந்து குடித்துவர வயிற்றுப்புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

ஓமம், சுக்கு, தனியா ஆகியவற்றை நன்றாக பொடித்து அரிசி கஞ்சியுடன் ஒரு சிட்டிகை அளவு கலந்து இந்துப்பு சேர்த்து  வெதுவெதுப்பாக குடிக்கவும் .இது செரித்த பின் பசி எடுத்தால் தான் அடுத்த உணவை நீங்கள் சாப்பிட வேண்டும். அதற்கு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை வெட்டி வேர் 15  கிராம்மை  ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்கவிட்டு அரை லிட்டர் ஆகும் வரை காய்ச்சி சூடு ஆறியதும் வடிகட்டி தண்ணீரை சிறிது சிறிதாக குடிக்க வேண்டும். இந்த மூலிகை தண்ணீர் உணவை நன்றாக செரிக்க வைத்து வயிற்றில் உள்ள புண்ணை ஆற்றி மாப்பு மந்தார நிலை ஏற்படாதவாறு பாதுகாக்கும்.

அரிசி திப்பிலி ,சுக்கு ,தனியா, கோரைக்கிழங்கு ,வில்வகாய், இவற்றை வகைக்கு 5 கிராம் எடுத்து 200 மில்லி லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மில்லி ஆகும் வரை சுண்ட காய்ச்சி வைத்து காலையில் அந்த கஷாயத்தை மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்ல பசியைத் தூண்டும் மந்தம் குறையும்.

Categories

Tech |