டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை ஆடையணிந்து பெருமையடைகிறேன் என்று நடராஜன் டுவிட்டரில் பதிவவிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த யார்க்கர் மன்னன் நடராஜன். இவர் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி நல்ல விக்கெட்டுகளை எடுத்து வந்தார். எனவே இவர்ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் தற்போது டெஸ்ட் போட்டியிலும் அவர் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் நடராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் மேலும் விராட் கோலி போன்ற சக விளையாட்டு வீரர்களும் அவருடைய விளையாட்டை பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர் டெஸ்ட் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற ஆடை அணிந்த புகைப்படத்தை நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் “இந்த வெள்ளை நிற ஆடை அணிந்து பெருமையாக உணர்கிறேன். அடுத்தகட்ட சவால்களை சந்திப்பதற்கு தயாராகி விட்டேன்” என்று கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.