Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அடி முதுகு பயங்கரமா வலிக்குதா… அப்ப இந்த உடற்பயிற்சியை செய்யுங்க போதும்..!!

அடி முதுகு வலிக்கு வீட்டிலேயே செய்யக்கூடிய பயிற்சி மூலம் எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம்.

இன்றைய காலக்கட்டத்தில் அதிகமானோர் அடிமுதுகு வலியின் காரணமாக அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக வண்டி ஓட்டுபவர்கள். அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அனைவருக்கும் இந்த வலி சாதரணமாக உள்ளது.இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற வீட்டிலேயே, 20 நிமிடங்களில் செய்யக்கூடிய பயிற்சி உள்ளது. அந்த பயிற்சி தரையில் நேராக குப்புறப் படுத்துக்கொண்டு, வலது கையை பக்கவாட்டில் உடலை ஒட்டியபடியும், உள்ளங்கை மேல் நோக்கியும் வைக்க வேண்டும்.

இடது கையை முன்பக்கமாக நீட்டி தரையைத் தொடும்படி வைக்கவேண்டும். இப்போது, இடது கை மற்றும் வலது காலை மேலே உயர்த்த வேண்டும். கால்களை வளைக்க கூடாது. இப்படி 20 முதல் 30 தடவைகள் செய்ய வேண்டும். ஒரு பக்கம் செய்த பின்னர் 5 விநாடிகள் ஓய்வு எடுத்த பின்னர் மறுபக்கம் பயிற்சியை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது மூலம் அடிமுதுகு பலம் பெறும்.

Categories

Tech |