இந்தியாவின் துப்பறியும் கதாபாத்திரம் பெல்லுடா பெயரில் கொரோனா தொற்றை விரைவாக கண்டறியும் சோதனை கருவி விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றை விரைவாக கண்டறிய உதவும் பரிசோதனை கருவி டாட்டா அன் சன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்திய அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் கண்டுபிடித்துள்ளது. விஞ்ஞானிகள் டாப்புஜுக்கு சக்ரவர்த்தி மற்றும் சவ்பிக் மைட்டி தலைமையிலான ஆய்வுக்குழு பேபர்ஸ்ஸ்கிப் கொண்டு கொரோனா தொற்றை கண்டறியும் கருவியை தயாரித்துள்ளனர். இந்த கருவிக்கு பெல்லுடா என பெயரிட்டுள்ளனர்.
வங்க திரைப்படம் மேதையும் எழுத்தாளருமான சத்யஜித்ரே உருவாக்கிய துப்பறியும் கதாபாத்திரம்தான் பெளுடா. அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்த பரிசோதனை கருவிக்கு டிடெக்டர் ஷேர்லாக் என பெயரிட்டதை போல இந்திய ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள இந்த பரிசோதனை கருவிக்கு பெலுடா என பெயரிட்டுள்ளனர். ஏறக்குறைய பிரக்னன்சி டெஸ்ட் மாதிரியான எளிய முறையே பெல்லுடா பரிசோதனை.
சோதனையின்போது கருவியில் இரண்டு கோடுகள் வந்தால் கோவிட் தொற்று உள்ளது என அர்த்தம். ஒரு கோடு மட்டுமே வந்தால் 98% தொற்று இல்லை என்று பொருள். இந்த பரிசோதனை முறையில் வைரஸ் இருப்பதை உறுதிபடுத்த 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே தேவைப்படும். தற்போதைய ஆர்டிபிஸியா பரிசோதனைக்கு 3 ஆயிரத்து 500 ரூபாய் செலவாகி வரும் நிலையில் பெல்லுடா பரிசோதனைக்கு வெறும் 500 ரூபாய் மட்டுமே செலவாகும்.
மேலும் பெல்லுடா பரிசோதனை 90% நம்பகத்தன்மை வாய்ந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். முற்றிலும் கிறிஸ்பர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த கிறிஸ்பர் தொழில்நுட்பத்திற்கு தான் இந்த ஆண்டு வேதியல் நோபல் பரிசு வழங்கப் பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் நடத்திய பரிசோதனைக்கு பின்னர் பெல்லுடா கொரோனா பரிசோதனைக் கருவிக்கு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து பெல்லுடா விரைவில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.