Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை மீட்ட சக மீனவர்கள்..!!

கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்த நான்கு மீனவர்களை சக மீனவர்கள் மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்திலிருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்கள் அனைவரும் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர்.இதில் அலெக்ஸ் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு கடல் சீற்றம் காரணமாக கடலில் மூழ்கியதால், விசைப்படகில் இருந்த நான்கு மீனவர்களும் கடலில் தத்தளித்தனர்.

இதையறிந்த மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரி இந்திய கடற்படையினருக்கு கோரிக்கை வைத்தார். இந்நிலையில் அந்தப் பகுதியில் மீன்பிடித்து கரைக்குத்திரும்பிய, சக மீனவர்கள் கடலில் தத்தளித்த அலெக்ஸ், குமார், கோபி, நாகூரான் ஆகிய நான்கு மீனவர்களையும் பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

Categories

Tech |