கொரோனாவில் இருந்து மீண்ட பெண்ணை பாதுகாப்பாக வீட்டில் சேர்த்த ஆட்டோ ஓட்டுனருக்கு ரூ.1,10,000 பரிசு முதல்வரால் வழங்கப்பட்டது
மணிப்பூர் தலைநகரான இம்பாலில் இருக்கும் அரசு ஜவகர்லால் நேரு மருத்துவ அறிவியல் கழகத்தின் ஆம்புலன்ஸ் சேவை வேறு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நிலையில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளது. இந்நிலையில் லெய்பி ஓணம் என்ற பெண் ஆட்டோ ஓட்டுனர் அவராகவே முன்வந்து தொற்றில் இருந்து குணமடைந்த பெண்ணை மருத்துவமனையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலைப்பாங்கான மாவட்டத்திற்கு 8 மணிநேரம் ஆட்டோ ஓட்டி பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார்.
மனிதாபிமான செயல் மற்றும் சேவையை பாராட்டி மணிப்பூர் முதலமைச்சர் இவருக்கு விருதாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொடுத்துள்ளார். இரண்டு குழந்தைகளின் தாயான ஓணம் வீட்டில் இவர் மட்டுமே வேலை செய்கின்றார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் வைத்து “ஆட்டோ டிரைவர்” என்ற தலைப்பில் ஆவணப்படம் 2015ஆம் ஆண்டு வெளியாகி தேசிய திரைப்பட விருதுகளில் சமூக வெளியீட்டு படம் மற்றும் 2017 மகளிர் குரல், இப்போது பார்வையாளர்கள் தேர்வு பிரிவில் சிறந்த குறும்படம் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளது.