Categories
மாநில செய்திகள்

பெண் பிள்ளைகள் திரெளபதியாக வாழ வேண்டும் – எச்.ராஜா

திரெளபதியின் பெயரை கேட்டாலே பலர் நடுங்குகின்றார்கள் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

திரெளபதி திரைப்படம் நாளை வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியானதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதற்கான சிறப்பு கட்சி இன்று ஒளிபரப்பப்படுகின்றது. இதனை பார்த்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்தோடு , பெற்றோர்கள் தன் வயதிற்கு வந்த மகளோடு பார்க்க வேண்டிய ஒரு நல்ல திரைப்படம்.

எத்தனை பெண் குழந்தைகள் நாடக காதலால் ஏமாற்றப்படுகிறார்கள். சமூக சீர்கேடுகள் நிறைந்திருக்கின்ற ஒரு சூழ்நிலையில் ஒரு சமூகத்தை சீர் படுத்துகின்ற ஒரு திரைப்படமாக இந்த திரெளபதி இருக்கும்.அனைத்து சமுதாய மக்களும் பார்க்கவேண்டிய படம். இதற்கெதிராக எழுந்த கருத்துக்கள்அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றது.

இந்த படத்தை பார்க்கும் போது நமக்கு தெரிகிறது ஒரு நல்ல சமூக சீர்திருத்தக் கருத்துக்களை , வயதுக்கு வந்த பெண் குழந்தை எல்லாம் பெற்றோர்களின் முக்கியத்துவத்தை உணர்கின்ற வகையில்  உருவாக்கபட்டு இருக்கிறது. ஒவ்வொரு பெண் குழந்தையும் திரெளபதி ஆகவேண்டும். திரெளபதியின் பெயரை கேட்டாலே  பலர் நடுங்குகின்றார்கள்  என்று எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

 

 

Categories

Tech |