Categories
தேசிய செய்திகள்

“பெண் சிட்டி ரோபோ” மனிதர்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டம்….. இஸ்ரோ சிவன் பேட்டி….!!

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முன்னோட்டமாக விண்ணுக்கு அனுப்பப்பட உள்ள ரோபோவை இஸ்ரோ அறிமுகப்படுத்தியுள்ளது.

 விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் ககன்யான். இதற்காக மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு ஒதுக்கி உள்ளது. இதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கிவிட்டது. ஏற்கனவே விண்ணுக்கு மனிதனை அனுப்ப கூடிய திட்டம் இதுவரை செயல்படுத்தியது இல்லை. எனவே அந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் ஆளில்லா இயந்திரத்தை வைத்து சோதனை ஓட்டம் செய்யப்படவேண்டும்.

இந்த ரோபோவானது   மனிதனைப் போன்ற ஒத்த பண்புகளைக் கொண்ட ஒரு ரோபோ. அந்த ரோபோவை பெங்களூருவில் இஸ்ரோ தலைவர் சிவன் அறிமுகப்படுத்தியுள்ளார். பெண் தோற்றமுள்ள அந்த ரோபோ மனிதனை போன்றே செயல்படக்கூடியது. இது குறித்து பேசிய சிவன், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் மூலமாக தொடர்ச்சியாகவே மனிதன் விண்ணில் தங்குவதற்கு இது அடித்தளமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |