Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தெரியாமல் முழுங்கிட்டேன்… பெண் ஒருவர் மரணம்… ஆழ்ந்த சோகத்தில் குடும்பத்தினர்…!!

செயற்கைப் பல் வயிற்றுக்குள் போனதால் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கே.பி.நகர் பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவருக்கு 3 பற்கள் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்ற வாரம் அதே பகுதியில் அமைந்திருக்கும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு புதிதாக 3 பற்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் தண்ணீரை குடித்த போது திடிரென எதிர்பாராவிதமாக அவருக்கு புதிதாகப் பொருத்தப்பட்ட 3 பற்களில் 2 பற்கள் கலந்துவிட்டது. அதன் பின் தண்ணீர் குடித்து கொண்டிருந்ததால் தன்னை அறியாமலேயே அந்த இரண்டு பற்களையும் அவர் விழுங்கி விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவருக்கு மயக்கம் மற்றும் வாந்தி தொடர்ந்து வந்துள்ளது.

இதனால் அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதில் அங்கு அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் எதுவும் தெரியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிறகு அவர் மீண்டும் உடல் நிலை பாதிப்படைந்து திடீரென மயங்கி விழுந்ததால் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் ராஜலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் புதிதாக பொருத்தப்பட்ட பற்களை விழுங்கியதால் ராஜலட்சுமி உயிர் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |