Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் IT ஊழியர் ரயில் மோதி பலி….. செல்போனால் ஏற்பட்ட கோர விபத்து…!!

பெருங்களத்தூரில் கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது ஐடி பெண் ஊழியர் ரெயில் மோதி உயிரிழந்தார்.

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீ மித்ரா என்பவர் பெருங்களத்தூரில் தங்கி தனியார் IT  நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் வேலைக்கு நேற்று வேலைக்கு பெருங்களத்தூர் ரயில் நிலையம் சென்றார்  ஸ்ரீமித்ரா. அப்பொழுது தண்டவாளத்தை கவனக்குறைவாக செல்போன் பேசியபடியே கடக்க முயன்றுள்ளார்.

Image result for ரயில் விபத்து

அப்போது அந்த வழியாக வந்த விரைவு ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்  தாம்பரம் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஸ்ரீ மித்ராவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |