Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண் காவலரிடம் அடிதடி…… அத்துமீறல் வழக்கு…… முன்னாள் காவல் ஆய்வாளர் கைது….!!

சென்னை ஆலந்தூரில் பெண் காவலரை அடித்து துன்புறுத்திய புகாரின் பேரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

சென்னை ஆலந்தூர் குடியிருப்பில் வசித்து வரும் காவலர் உமா மகேஸ்வரி என்பவருக்கும், டில்லிபாபு என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. டில்லி பாபு மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சமயத்தில்  சரிவர பணிக்கு வராததால் காவல்துறை சார்பில் அவருக்கு விருப்ப ஓய்வு கொடுத்து பணியில் இருந்து நீக்கி விட்டனர்.

Image result for பெண் காவலரை அடித்த

இந்நிலையில் டில்லி பாபு காவலராக பணிபுரிந்து வரும்  உமா மகேஸ்வரியை தினம்தோறும்  அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து உமாமகேஸ்வரி  அவரது தொந்தரவு தாங்க முடியாமல் பரங்கிமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி  கொடுத்த புகாரின் பேரில் டில்லி பாபு மீது வழக்கு பதிவு  செய்யப்பட்டு அவர்  கைது செய்யப்பட்டார்.

Categories

Tech |