ஜெர்மனியில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஒரு அழகி அதிவேகமாக வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் Julia Jasmin Ruehle (33). இவர் நெடுஞ்சாலையில் நேற்று அதிவேகமாக வாகனத்தில் சென்றிருக்கிறார்.
அப்போது திடீரென்று வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் நெடுஞ்சாலையின் இடையில் இருந்த தடுப்பின் மேல் பயங்கரமாக மோதி, சாலையில் பலதடவை தலைகீழாக விழுந்தது. இந்த கொடூர விபத்தில் Julia பலத்த காயமடைந்தார்.
எனினும் வாகனத்தில் இருந்து வெளியேறிவிட்டார். அதன்பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவரின் உயிருக்கு பாதிப்பு இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.