Categories
தேசிய செய்திகள்

என்னால சொல்ல முடியல… முகத்த வெளிய காட்ட முடியல… தற்கொலை செய்த பெண்.. சிக்கிய பகீர் கடிதம்..!!

கடன் கொடுத்தவர் தன்னை துன்புறுத்தியதல் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேச மாநிலம் கவர்தல் கிராமத்தை சேர்ந்த நிஷா என்பவர் தற்கொலை செய்யும் எண்ணத்துடன் அதிக அளவு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது கைப்பட கடிதம் ஒன்று எழுதி வைத்திருந்தார். அதனை கைப்பற்றிய காவல்துறையினருக்கு பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

எழுதப்பட்டிருந்த கடிதத்தில் “அப்பா நான் பெரும் சிக்கலில் சிக்கி உள்ளேன். அதை என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. எனது முகத்தை வெளியில் காட்டுவதற்கும் அல்லது மறைப்பதற்கும் கூட முடியவில்லை. அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கிறேன். எனது மரணத்திற்கு அனுப் என்பவர்தான் முழு காரணம். என்னை அவர் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிகமாக துன்புறுத்தினார்” என எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து காவல்துறையினர் விசாரணையில், அனுப்பிடம் நிஷா கடனாக ரூபாய் 41,000 வாங்கியுள்ளார் என்பதும் அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழலில் நிஷாவை தன்னுடன் தொடர்பு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தியதோடு, சில வீடியோக்களை சமூக வலைதளத்திற்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனைத்தொடர்ந்து தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |