தமிழகத்தில் வருகிற 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் தற்போது இருந்தே பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதற்கு தயாராகி விடுவார்கள். பொதுவாகவே பண்டிகை தினங்களில் ரயில்களில் டிக்கெட் கிடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். பண்டிகை தினம் ஆரம்பிப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே டிக்கெட் முன்பதிவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
இந்நிலையில் எவ்வித பிரச்சனையும் இன்றி சுலபமான முறையில் எப்படி டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி ரயிலில் ஒரு மாதத்திற்கு முன்பு அல்லது இரண்டு மாதத்திற்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஒரு வாரத்திற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்தால் கிடைப்பது மிகவும் கஷ்டம். ஆனால் தட்கல் ரயிலில் ஒரு நாளைக்கு கன்ஃபார்ம் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். ஆனால் இதிலும் நிறைய பேர் முயற்சி செய்வதால் டிக்கெட் கிடைப்பது பிரச்சினையாக தான் இருக்கிறது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன்பு அதில் உள்ளீடு செய்யும் தகவல்களை ரெடியாக வைத்திருக்க வேண்டும்.
அதற்கு மாஸ்டர் லிஸ்ட் முன்கூட்டியே தயார் செய்து வைத்துக் கொள்ளலாம். அப்படி செய்வதன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஒரே கிளிக்கில் உங்களுடைய விவரங்கள் மொத்தமும் பதிவாகிவிடும். இதனையடுத்து தற்கலில் ஏசி கோச் 10 மணிக்கும், சாதாரண ஸ்லீப்பர் கோச் 11 மணிக்கும் திறக்கும்.
எனவே இந்த நேரத்திற்கு 5 நிமிடத்திற்கு முன்பாகவே நாம் லாகின் செய்து ரெடியாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த சீட் வேண்டும் என்பதை நாம் தேர்வு செய்யக்கூடாது. அப்படி தேர்வு செய்தால் கடைசி நேரத்தில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகாமல் போய்விடும்.