கொரோனா பாதிப்பு இருக்கின்றதா ? என்ற சந்தேகத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்துள்ளார்.
சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவையும் கொரோனா விட்டு வைக்கவில்லை கேராளாவில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தலைநகர் டெல்லி , தமிழகம் உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் என 60க்கும் அதிகமானோருக்கு இந்த தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சியளிக்கும் வகையில் இந்தியாவில் முதல் உயிரிழப்பு அரங்கேறியுள்ளதாக தகவல் எழுந்தது.
கர்நாடக மாநிலம் கல்புர்க்கிக்கு கடந்த பிப்ரவரி 29 ம் தேதி சவூதி அரேபியாவிலிருந்து வந்த 75 வயதான முகமத் சித்திக் உசேன் என்பவருக்கு சளி , காய்ச்சல் இருந்ததால் அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு அங்குள்ள தனி வார்டில் வைத்து கண்காணிக்கப்ட்டார்.
அவரின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு சென்ற நிலையில் இன்னும் முடிவுகள் வராத நிலையில் அவர் தற்போது உயிரிழந்துள்ளனர். இன்று மாலை தான் முடிவு தெரியவரும் என்ற நிலையில் இவரின் உயிரிழப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா உயிரிழப்பு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.