FIFA 2022 உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 21-ஆம் தேதி முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், 15 லட்சம் பேர் போட்டியை நேரில் பார்ப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,75,000 பேர் தங்கும் வகையில் ஹோட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் கத்தார் அரசு ஒரு பிரபலமான கப்பல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்ததன் காரணமாக மிதக்கும் ஹோட்டல்கள் வசதியும் ஏற்பாடு செய்யப்படும். இந்நிலையில் கத்தார் நாட்டில் போட்டி நடைபெறும் மைதானம் குறித்த தகவலை தற்போது பார்க்கலாம்.
அதன்படி இந்த போட்டிக்காக 8 மைதானங்கள் தயார் நிலையில் இருக்கிறது. இங்குள்ள ஒரு மைதானத்தில் இருந்து மற்றொரு மைதானத்திற்கு செல்வதற்கு 1 மணி நேரம் ஆகும். இதனையடுத்து கத்தார் நாட்டில் உள்ள அகமது பின் அலி ஸ்டேடியம், அல் ஜனுப் ஸ்டேடியம், அல் துமாமா ஸ்டேடியம், எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம், கலீஃபா சர்வதேச அரங்கம், ஸ்டேடியம் 974, அல் பேத் ஸ்டேடியம், லுசைல் ஸ்டேடியம் போன்றவைகளில் போட்டி நடைபெறும்.
கடந்த 2018-ம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது பிரான்ஸ் அணி 2-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. மேலும் FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தரவரிசையில் பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், அர்ஜெண்டினா, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், மெக்ஸிகோ மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் 10 இடத்தில் இருக்கிறது.