Categories
அரசியல்

FIFA 2022: உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்தவர்கள்….. யார் யார் தெரியுமா?….!!!!

FIFA 2022: கத்தார் நாட்டில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது நவம்பர் 20-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கும் நிலையில், உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தற்போதிருந்தே கத்தார் நாட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதன் பிறகு உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பிரேசில் இருக்கிறது. இந்த அணி கடந்த 1958, 1962, 1970, 1994, 2002 போன்ற ஆண்டுகளில் கோப்பையை வென்று 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல்களை அடித்த வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

அதன்படி உலகக்கோப்பை கால்பந்து போட்டி கடந்த 1930-ம் ஆண்டில் தொடங்கிய நிலையில், அப்போதிருந்தே ஆடவருக்கான பிரிவில் அதிக கோல்கள் அடித்த 5 வீரர்கள் குறித்து பார்க்கலாம்.

1. மிரோஸ்லாவ் ஜோசப்:

இவர்தான் உலக கோப்பையில் அதிகபட்சமாக 16 கோல்களை அடித்துள்ளார். இவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர். கடந்த 1978-ம் ஆண்டு போலந்தில் பிறந்த ஜோசப், 24 ஆட்டங்களில் 16 கோல்களை வலைக்குள் அடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

2. ரொனால்டோ:

இவர் 19 ஆட்டங்களில் 15 கோல்களை வளைக்குள் அடித்து சாதனை படைத்துள்ளார். பிரேசில் வீரரான ரொனால்டோ கடந்த 1998-ம் ஆண்டு தான் முதன்முதலாக உலகக் கோப்பையில் கலந்து கொண்டு விளையாடினார்.

3. ஜெர்ட் முல்லர்:

இவர் 14 கோல்களை அடித்துள்ளார். ஜெர்மனி வீரரான முல்லர் கடந்த 1970-ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 10 கோல்களை அடித்து சாதனை படைத்தார். இதனால் முல்லருக்கு தங்க ஷூ வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் கடந்த வருடம் வயது முதிர்வின் காரணமாக தன்னுடைய 70-வது வயதில் உயிரிழந்தார்.

4. ஜஸ்ட் லூயிஸ் போன்டைன்:

இவர் பிரான்ஸ் அணி வீரர் ஆவர். கடந்த 1958-ம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற போட்டியின் போது 6 ஆட்டங்களில் 13 கோல்களை அடித்தார். இந்த ஒரே ஒரு உலகக்கோப்பை போட்டியில் தான் ஜஸ்ட் லூயிஸ் கலந்து கொண்டார். ஆனால் ஒரு போட்டியிலேயே தன்னை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டார். இவர் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்.

5. பீலே:

இவரை கால்பந்து போட்டியின் ஜாம்பவான் என்று அழைப்பார்கள்‌. இவர் பிரேசில் அணியை சேர்ந்தவர். மொத்தம் 12 கோல்களை அடித்துள்ளார். ‌ இவர் கடந்த 1970-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான விருதை பெற்றார். மேலும் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார்.

Categories

Tech |