கேரளாவில் அதிகளவிலான கால்பந்து ரசிகர்கள் இருக்கின்றனர். FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னதாகவே ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட் அவுட் வைப்பது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் கேரளா ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர்.
கத்தாரின், லுசைல் நகரில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற FIFA உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்சை வீழ்த்தி, அர்ஜென்டினா அணியானது 2-வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.
இவ்வாறு அர்ஜென்டினா அணி வெற்றியடைந்ததை கேரளாவில் உள்ள ரசிகர்கள் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 50 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.