கால்பந்தின் அரையிறுதியில் மொரோக்கா அணி தோல்வியடைந்ததால், கோபடைந்த ரசிகர்கள் கலவரத்தை உண்டாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கோப்பை கால்பந்தின் அரை இறுதிப் போட்டியானது கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் மொராகோ அணியானது, பிரான்ஸ் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால், மொராக்கோ ரசிகர்கள் வருத்தமடைந்தார்கள். மேலும் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாமல் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் கலவரத்தை உண்டாக்கினர்.
காவல்துறையினர் மீதும் கற்களை தூக்கி எறிந்தார்கள். மேலும் பெல்ஜியத்தில் காவல்துறையினர் மீது மொராக்கா ரசிகர்கள், பட்டாசுகளை கொளுத்தி போட்டனர். கார்களுக்கும் நெருப்பு வைத்து பெரும் வன்முறையை ஏற்படுத்தினர். இதனால் அங்கு பதற்ற நிலை நிலவியது.
அந்த பகுதி முழுக்க நெருப்புக்குழம்பாக காட்சியளித்தது இந்த கலவரங்களை தடுக்க முயன்ற காவல்துறையில் இருக்கும் ரசிகர்களுக்கும் இடையே கடும் போதல் உண்டானது அதன் பிறகு கலவரத்தை அடக்குவதற்காக கூடுதலாக காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள்