2022 FIFA உலகக் கோப்பையின் போது பயணிக்கும் ரசிகர்களுக்கு தொந்தரவு இல்லாத அனுபவத்தை உறுதி செய்வதற்கு சர்வதேச தூதரக சேவைகள் மையத்தை (ICSC) திறக்கபடவுள்ளது. ஃபிஃபா உலகக் கோப்பை வரலாற்றில் இதுபோன்ற ஒரு வசதியை நடத்தும் நாடே வழங்குவது இதுவே முதல் முறையாகும். இந்த திறப்பு விழாவில் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தியா மற்றும் ஜப்பான் உட்பட 40 க்கும் மேற்பட்ட தூதரகங்கள் சர்வதேச தூதரக சேவைகள் மையத்தில் பிரதிநிதித்துவப் படுத்தப்படும். சர்வதேச தூதரக சேவைகள் மையம் நவம்பர் 1 ஆம் தேதி செவ்வாய் அன்று பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. இது தொஹா கண்காட்சி மையம் மற்றும் மாநாட்டில் ஹால் நான்கில் அமைந்துள்ளது. மேலும் இது தினசரி திறக்கும் நேரம் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இருக்கும்.
SC, வெளியுறவு அமைச்சகம் , உள்துறை அமைச்சகம் , கத்தார் முழுவதும் உள்ள தூதரகங்கள் மற்றும் பிற முக்கிய தேசிய நிறுவனங்களுக்கு இடையிலான விரிவான ஒத்துழைப்பைத் தொடர்ந்து ICSC அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து எஸ்சியின் பொதுச்செயலாளர் HE ஹசன் அல் தவாடி கூறியதாவது “FIFA உலகக் கோப்பை வரலாற்றில் முதல் சர்வதேச தூதரக சேவைகள் மையத்தை தொடங்குவதில் நாங்கள் பெருமை அடைகிறோம். இந்த மையம் தூதரகங்களுக்கு அவர்களின் ரசிகர்களின் தூதரகப் பிரச்சினைகளைத் தீர்க்க, பல்வேறு தேசிய நிறுவனங்களுக்கான முக்கிய இணைப்புகளுடன் மையப்படுத்தப்பட்ட மற்றும் அணுகக்கூடிய இடத்தை வழங்குகிறது” என்று கூறியுள்ளார்.
வெளியுறவு தூதரக விவகாரங்கள் துறையின் இயக்குநர் HE முஹம்மது அப்துல்லா சயீத் அல் சுபெய் கூறியதாவது “வரவிருக்கும் உலகக் கோப்பை முழுவதும் ரசிகர்களுக்கு ICSC முக்கிய சேவைகளை வழங்குகிறது. இந்த வசதியின் வளர்ச்சியை ஆதரித்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எஸ்சி மற்றும் கத்தார் முழுவதும் உள்ள தூதரகங்களின் முக்கிய பங்களிப்பிற்காக நன்றி கூறுகிறோம்” என்று கூறியுள்ளார்.