Categories
அரசியல்

FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி 2022: முதன்முறையாக நடுவர்களாக மகளிர்…. பெரும் வரவேற்பு…!!!!

FiFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள இந்த உலகக்கோப்பை போட்டி 28 நாட்கள் ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் நடைபெறுவது இதுவே முதல்முறை. அதனுடைய இறுதிப் பந்தயம் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நடைபெறும். இதில் இந்த போட்டியை நடத்தும் கத்தார் உட்பட 32 அணிகள் மட்டுமே பங்குபெறும். இந்த அணிகள் மொத்தம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இந்த போட்டியில் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள். இந்த நிலையில் முதன்முறையாக FIFA vகால்பந்து உலக கோப்பை தொடரில் மகளிர்களை நடுவர்களாக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

Categories

Tech |