FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா கிட்டத்தட்ட 36 வருடங்களுக்குப் பிறகு கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் அர்ஜென்டினா அணியை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி. இவர் தன்னுடைய அசாத்திய திறமையால் கோப்பையை கைப்பற்றி கொடுத்துள்ளார். அதன்பிறகு மெஸ்ஸி வெற்றி பெற்ற கோப்பையை முத்தமிடும் காட்சிதான் 2022-ம் ஆண்டில் அதிக லைக்ஸ்களை குவித்த புகைப்படம் என்ற பெருமையை பிடித்துள்ளது. இருப்பினும் மெஸ்ஸி தன்னுடைய உலகக் கோப்பையை விடுவதாக தெரியவில்லை.
வெற்றிக் கோப்பையுடன் தாய் நாட்டிற்கு சென்ற மெஸ்ஸி படுக்கையில் தான் வென்ற கோப்பையை கட்டிப்பிடித்து தூங்குகிறார். இது தொடர்பான புகைப்படங்களை மெஸ்ஸி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து சிறுவயது கனவு தற்போது நிறைவேறியுள்ளது என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தாறுமாறாக வைரல் ஆகி வருகிறது. அதன் பிறகு உலக கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்காக அங்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அர்ஜென்டினாவுக்கு கால்பந்து உலகக்கோப்பையை வென்றது தற்போது புத்துணர்ச்சி தரும் விஷயமாக மாறியுள்ளது.
View this post on Instagram