RelianceJIO பயனாளர்க்ளுக்கு இந்த வருடம் நடைபெறயிருக்கும் FIFA World Cup Quatar (2022) நிகழ்வை இலவசமாக லைவ்பார்க்கும் வாய்ப்பினை ஜியோ வழங்கவுள்ளது. இந்த புட்பால் போட்டியானது வருகிற நவம்பர் 20ம் தேதி துவங்கி டிசம்பர் 18 வரை நடைபெற இருகிறது. பிரமாண்ட கால்பந்து போட்டியை JIO பயனாளர்கள் இலவசமாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Viacom18 Sports, FIFA உலகக்கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம்செய்ய இருக்கிறது. “Isse Bada Kuch Nahi” என்ற பிரச்சாரத்தின் பெயரில் இந்நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக ஜியோ பயனாளர்கள் அனைவரும் FIFA WorldCup Quatar போட்டியை லைவ் காணும் அரியவாய்ப்பு உருவாகி இருக்கிறது.
நீங்கள் JIO வாடிக்கையாளராக இருப்பின் உங்களது ஸ்மாரட் போனில் Jio Cinema செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் வாயிலாக நீங்கள் லைவ் ஸ்ட்ரீம் காணலாம். இதற்கு எந்தவித கட்டணமும் இல்லை. அத்துடன் இந்த உலககோப்பையை தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் பார்க்க Jio Cinema செயலி ஏற்பாடு செய்திருக்கிறது. நீங்கள் FIFA World Cup ரசிகர் எனில், இந்த வாய்ப்பை மிஸ் செய்துவிட வேண்டாம்.